இன்றைய தினம் (5) இலங்கையில் புதிதாக 735 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 3, 15, நாவல மற்றும் பொகவந்தலாவயில் இடம்பெற்ற நான்கு மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மரண பட்டியல் 343 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இதுவரை 67850 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 61461 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment