இலங்கையில் இன்றைய தினம் (4) 704 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 67115 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இதில் 60567 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் ஏழு பேரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மரண எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 6209 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment