மேல் மாகாணத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்ற சுகாதார அமைச்சு, இன்றைய தினம் 57 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறது.
பொது மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் அதிகாரிகளும் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 27 ஆயிரம் பேரளவில் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மாத்திரமே இன்றைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment