ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பின்னணியில் உள்ளவர்களுக்கு அடுத்து 2 - 3 வாரங்களுக்குள் தண்டனை வழங்கப்படும் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
இந்த அரசாங்கம் வாய்ப் பேச்சோடு நில்லாது, வாக்குறுதிகளுக்கமைவாக செயற்படும் எனவும் அரசாங்கம் 'பெயில்' ஆகி விட்டது என்று கூறுபவர்கள் இதனை விரைவில் உணர்ந்து கொள்வார்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடாத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் தமது இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைவாக தாம் செயற்படப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment