இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பிற்கு எதிராக நாளை மறுதினம் 23ம் திகதி ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் உடலங்களை அடக்கம் செய்யவும் அனுமதிக்கப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலிந்து பதில் சொல்லி, அதனை வெளிநாட்டு தலைவர்கள், தூதர்களை நம்ப வைத்திருந்த போதிலும் அவ்வாறு எதுவும் நடக்காத நிலையில் அதனைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் றாளை அல்லது நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கட்டாய ஜனாஸா எரிப்பினை எதிர்த்து 23ம் திகதி ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment