ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி என நம்பப்படும் சஹ்ரான் ஹாஷிமினால் ஆகக்குறைந்தது 15 பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டதாகவும் அதில் ஐவர் ஏலவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன.
எஞ்சியிருப்பவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் மாவனல்லையில் கைதான 24 வயது பெண்ணும் அதில் ஒருவர்தான் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமையும் குறித்த பெண்ணின் தந்தையும் சகோதரர்களும் ஏலவே புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment