திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 50 ஆகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிடுவதாகவும் முன்னர் அனுமதித்தது போன்றே 150 பேர் கலந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கிறார் கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
திருமண நிகழ்வுகளில் கொரோனா பரவல் வெகுவாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் அரசாங்கம் விருந்தினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருந்தது.
எனினும், திருமண சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அந்த திட்டத்தைக் கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment