எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது கல்வியமைச்சு.
ஒக்டோபரில் ஆரம்பித்த இரண்டாவது சுற்று கொரோனா பரவலின் பின்னணியில் பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்கள் முடங்கியுள்ள நிலையில், நாட்டை வழமைக்குக் கொண்டு வருவதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொழும்பில் இயங்கும் 492 பாடசாலைகளில் 412 தயாராக இருப்பதாகவும், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பாடசாலைகள் இயங்குவதில் ஆபத்தில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 முதல் இயங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment