தான் பதவிக்கு வந்தது முதல் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
சிறு குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்ததாகவும் 12,000 பேரையே வைத்திருக்க கூடிய சூழ்நிலையில் 30,000 பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போது அவ்வெண்ணிக்கை 18,000 வரை குறைந்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், 15 வருடங்களுக்கு மேல் சிறைவாசமிருந்த 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment