உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைவாகவே இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் எரிக்கப்படுவதாக புதிய விளக்கம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
தான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் தனக்கும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கோரி போராட்டம் நடாத்த முடியும் எனவும், எனினும் இங்கு உலக மற்றும் நாட்டின் சுகாதார நிபுணர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவே உடலங்கள் எரிக்கப்படுவதால் மௌனமாக இருப்பதாகவும் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார நிபுணர்களின் அறிவுரையில் அரசியல் தலையீடு எதுவுமே இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment