கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கடந்த அரசாங்கம் விற்பனை செய்ய முயன்றதாக பெரமுன அரசு தெரிவிக்கும் கருத்தினை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியும் மறுத்துள்ளது.
ஒப்பந்தத்தின் பிரதியை வெளியிட்டுள்ள ஐ.தே.க, வெளிநாடு ஒன்று இயக்குவதற்கான அனுமதியை வழங்கவே உடன்பாடு காணப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு 49 வீத பங்கினை வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment