ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியலைப் பயன்படுத்துவதற்கான நேரம் இன்னும் வரவில்லையெனவும் சரியான தருணத்தில் அதனூடாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்வார் எனவும் அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனவும் நாட்டு நிலவரத்தை அவதானித்து அடுத்த வருடமளவில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இழுபறியிலிருந்து அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் அண்மையிலேயே முடிவுக்கு வந்து அதனூடாக அத்துராலியே ரதன தேரர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment