ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில், உயிரிழப்பை இருபதாயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால் சாதனையென தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்த போதிலும் இன்றைய தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சமாகியிருப்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 35000 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment