பெரமுனவோடு கடந்த தேர்தலில் கை கோர்த்திருந்த போதிலும் போதிய 'மரியாதை' தரப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆதங்கம் வெளியிட்டிருந்த நிலையில் அக்கட்சியை சமகி ஜன பல வேகயவுடன் இணைய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் கபீர் ஹாஷிம்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தேர்தலுக்குப் பின்னும் பெரமுன ஆதரவாளர்கள் கடுமையாக அவமானப்படுத்தி வருவதுடன் அவர்கள் எந்த மேடையில் ஏறினாலும் கூச்சல் போட்டு குழப்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சு.க தலைமைத்துவம் தமது கட்சியோடு இணைவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சு.க - பெரமுன உறவு விரிசலடைந்து வருவதாக அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment