டிசம்பர் 24ம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது 'பொசிடிவ்' என முடிவு வந்த போதிலும் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டபோது 'நெகடிவ்' என முடிவு வந்த நிலையில் குறித்த நபர் அதனை உபயோகப்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரைத் தேடி அதிகாரிகள் வீடு சென்ற போதே கடந்த 29ம் திகதி குறித்த நபர் டுபாய் சென்று விட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வைத்தியசாலையின் முடிவு பொசிடிவாக வந்த நிலையில் இன்னொரு வைத்தியசாலையின் முடிவு நெகடிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment