இதுவரை 90 நாடாளுமன்ற உறுப்பினர்களே பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாகவும் ஏனையோரும் தாமதிக்காது செய்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சபாநாயகர் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியென இரு தரப்பிலும் அலட்சியம் நிலவி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment