இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு மற்றும் யுத்த குற்றச்செயல்களை சுயாதீனமான முறையில் விசாரித்து நடவடிக்கையெடுப்பதற்கான தமது பொறுப்பிலிருந்து அரசாங்கம் தவறி விட்டதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் கொரி ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் இதற்கான வாக்குறுதியளித்திருந்த போதிலும் நடைமுறையரசு அதிலிருந்து விலகிக் கொண்டுள்ள நிலையில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு கூட்டாக இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் சி.வி விக்ணேஸ்வரன், ஆர். சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதகளும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment