இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பைத் தொடர அனுமதிக்க முடியாது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உத்தியோகபூர்வ ரீதியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாகவே கட்டாய ஜனாஸா எரிப்பு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கையில், அடக்கத்தையும் அனுமதிக்குமாறு முன் வைக்கப்பட்ட நிபுணர்களின் பரிந்துரையையும் மீறி இவ்வாறு இடம்பெறுவதாக மனித உரிமை மீறல் எனவும் அதனைத் தொடர அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான பரிசோதனைகளின் அடிப்படையில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கும் அரசாங்கம் முறையாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கட்டாய ஜனாஸா எரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.sonakar.com/2021/01/stop-forced-cremations-in-sri-lanka-un.html
No comments:
Post a Comment