எறும்புக்குக் கூட அநீதியிழைக்கக் கூடாது என்ற புத்தரின் போதனைகளைத் தழுவிய தர்மத்தை சரியான முறையில் பின்பற்றும் ஒருவரால் எக்காரணம் கொண்டு ஏனைய மதங்களை கேவலப்படுத்த முடியாது என்று தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.
அண்மையில் உதய கம்மன்பில தான் அல்-குர்ஆனை இரு தடவைகள் வாசித்தும் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக சொல்லப்பட்ட எதையும் காணவில்லையென கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அல்-குஆர்னில் இது தொடர்பில் ஆகக்குறைந்தது பத்து இடங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை முன் வைத்து பேசுகையிலேயே அசாத் சாலி இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் தனிமைப்பட வேண்டும் எனும் சமூக நடவடிக்கையைக் கூட 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் வழிகாட்டலாக முன் வைத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், கம்மன்பில போன்றோர் ஏனைய மதங்களை கேவலப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment