மேல் மாகாணத்தின் தனிமைப்படுத்தப்படாத பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று ஆரம்பமான நிலையில் மாணவர் வரவு திருப்தியளிப்பதாக தெரிவிக்கிறது கல்வியமைச்சு.
கொழும்பில் 26.81 வீத மாணவர் வரவு பதிவாகியுள்ள அதேவேளை களுத்துறையில் 61.41 வீதமும் நீர்கொழும்பில் 52.43 மாணவர் வரவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment