ஆளுங்கட்சியைச் சார்ந்த மரண தண்டனைக் கைதிகள் நாடாளுமன்றம் வர அனுமதித்தது போன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஆறு மாத காலம் சிறையச்சாலையில் இருந்த பின்னரே அவரது நாடாளுமன்ற இருக்கை வெற்றிடமாகும் எனவும் கிரியல்ல விளக்கமளித்துள்ளார்.
எனினும், ரஞ்சனின் இருக்கை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றைய தினம் தேர்தல் செயலகத்துக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment