சவுதி அரேபியா மற்று கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர்களை அங்கீகரிப்பதை இரு நாடுகளும் தாமதப்படுத்தியுள்ளமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினைக் கொண்டு வந்த கனடா, புதிய தூதராக அனுப்பப்பட்டுள்ள முன்னாள் விமானப் படைத்தளபதி ஏ.சி.எம் டயசின் நியமனத்தை அங்கீகரிப்பதை தாமதித்து வருகிறது.
இதேவேளை, ரிசானா நபீக் விவகாரத்தில் சவுதி - இலங்கையிடையே ஏற்பட்ட ராஜதந்திர விரிசலின் போது அங்கு கடமையாற்றிய அஹமத் ஏ ஜவாதினை மீண்டும் அங்கீகரிப்பதை சவுதியும் தாமதப்படுத்தி வருகிறது.
கட்டாய ஜனாஸா எரிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment