இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளிகளாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் உத்தரவுக்கமைவாக இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மாகாண ரீதியாக கடமைகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நாட்டில் 43856 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 36155 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment