யாழ். பல்கலையில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்தழித்ததை கண்டித்துள்ள சர்வதேச யாழ் முஸ்லிம் சமூக அமைப்பு சகோதர சமூகத்தின் உரிமைப் போராட்டத்தில் யாழ் முஸ்லிம் சமூகம் உட்பட இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து தோள் கொடுக்கும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைப்பினர் சோனகர்.கொம்மோடு உரையாடி விளக்கமளிக்கையில், தமிழ் மக்களின் உரிமை சார் உணர்வு போராட்டத்தில் சக சமூகமாக நாமும் எமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு நினைவுத் தூபிகளை உடைப்பது உணர்வுகளையும் உள்ளங்களையும் உடைப்பதாகும் எனவும் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், மற்றவர் உரிமையையும் உணர்வுகளையும் மதித்து, சமத்துவமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை பெரும்பான்மை சமூகத்துக்கும் உருவாக்கும் வரையில் அரசு முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை சோனகர் சங்கம் உட்பட பல்வேறு சிவில் அமைப்புகள் தமிழ் மக்கள் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டுள்ளமையும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் யாவும் மக்களை ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment