சுகயீனமுற்று இறந்த ஒருவரது உடலத்தை கொரோனா தொற்று எதுவுமில்லையென உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு மறு நாள் சென்று இறந்தவருக்கு தொற்றிருந்ததாக சுகாதார அதிகாரிகள் உடலைக் கைப்பற்ற முனைந்த சம்பவம் குருநாகல், நீரமுல்ல கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடு நடந்து, ஊர் மக்கள் பெருமளவில் இறுதி மரியாதையை செலுத்தியிருந்த நிலையில் 20ம் திகதி கையளிக்கப்பட்ட உடலத்தைத் திருப்பிக் கேட்டு மறுநாள் அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன் போது உறவினர்கள் கடுமையாக எதிர்த்ததன் பின்னணியில் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக விரைந்த கொகரல்ல பொலிசார், பிரதேசத்தின் பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து சமய சடங்குகளை நிறைவேற்றி விட்டு பின் உடலத்தை சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கச் செய்துள்ளனர். ஏலவே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சிலருக்கு தொற்றிருப்பதாகவும் தவறாக கூறப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை தொற்றினால் உயிரிழந்தவர்களை உறவினர்களிடம் கையளித்து விட்டு மறு தினம் மீண்டும் உடலைத் திருப்பிப் பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்)
No comments:
Post a Comment