இம்மாதத்துக்குள் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என நிலவி வரும் எதிர்பார்ப்பினை நிராகரித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
அது பற்றி இன்னும் பேசப்படவுமில்லையென செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு மஹிந்த பதிலளித்துள்ளார்.
எனினும், 20ம் திருத்தச் சட்டத்துக்கு அரசுக்கு ஆதரவளித்தவர்களில் சிலர் தமக்கான பதவிகளைப் பெற தொடர்ந்து நெருக்குதல்களை ஏற்படுத்தி வருவதுடன் அத்துராலியே ரதன தேரர் அரசில் இணைந்து கொள்ள பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment