இலங்கையில் கொரோனா அபாயம் தணிந்து சாதாரண சூழ்நிலை நிலவுவதாக உலகுக்குக் காட்டுவதற்காக திட்டமிட்ட வகையில் நடாத்தப்படும் சுற்றுலாப் பயணிகள் வருகை ஒரு நாடகம் என அரசியல் மட்டத்தில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நாளைய தினம் பொலன்நறுவ மற்றும் சீகிரிய பகுதிகளுக்கு உக்ரைன் நாட்டவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதால் அங்கு உள்நாட்டவர் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் யால பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளை பூங்காவை சுற்றிக் காட்ட ஏற்றிச் சென்ற வாகன சாரதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தினரின் உறவுக்காரரான உதயங்க வீரதுங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உக்ரைன் நாட்டவர் வருகையின் பின்னணியில் தனிப்பட்ட பொருளாதார அடைவுகள் அவர் சார்ந்தவருக்கு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment