இந்திய - இலங்கை நல்லுறவின் நிமித்தம் இலங்கைக்க ஒரு தொகை கொரோனா தடுப்பூசியை இந்தியா இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.
ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியென பரவலாக அறியப்படும் தடுப்பு மருந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையில் இலங்கைக்கு ஒரு தொகையினை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பைசர் நிறுவனம் மற்றும் ரஷ்ய தயாரிப்பு தடுப்பூசிகளையும் இலங்கையில் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment