ஈஸ்டர் தாக்குதல்தாரி இன்சாப் இப்ராஹிமுக்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் பத்து பேருக்கு எதிரான வழக்கு சட்டமா அதிபர் அலுவலகத்தினால் கைவிடப்பட்டுள்ளதன் பின்னணியில் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களுக்கு பிணை மறுக்கும் அளவுக்கு போதிய சாட்சியங்கள் வழங்கப்படாத நிலையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இன்சாபோடு தொடர்பிலிருந்ததன் பின்னணியில் ரிசாத் பதியுதீனின் சகோதரன் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment