ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் இயங்கவுள்ளார். எனினும் பொதுச் செயலாளர் பதவியை பாலித ரங்கே பண்டார பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, நிர்வாக மட்டத்திலான மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக தெரிவித்து வந்தது. இந்நிலையில் செயற்குழு அதற்கான நியமனங்களை இன்று மேற்கொண்டுள்ளது.
இப்பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இயங்கவுள்ள அதேவேளை பாலித ரங்கே பண்டார பொதுச் செயலாளராகவும் அகில விராஜ் காரியவசம் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment