ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சமாளிக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday, 30 January 2021

ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சமாளிக்க முஸ்தீபு

 


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் கடுந்தொனியில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சு அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.


கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரமும் சர்வதேச அவதானத்தைப் பெற்றுள்ள அதேவேளை யுத்த குற்றங்கள், ஏனைய சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடக சுதந்திரதம், பேரினவாதம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த அரசு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கியிருந்த வாக்குறுதியிலிருந்து நடைமுறை அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது.


இந்நிலையில், தற்சமயம் பாரிய அளவில் சர்வதேச அழுத்தங்கள் தோன்றியுள்ளதுடன் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட நடவடிக்கை, முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் உட்பட கடுமையான பரிந்துரைகளை ஆணையாளர் முன் வைத்துள்ளார்.


இப்பின்னணியிலேயே அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி சில இணக்கப்பாடுகளைக் காண அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment