கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் முதலிட பல வெளிநாடுகள் ஆர்வம் காட்டியிருந்த போதிலும் தான் யாருக்கும் அனுமதியளிக்கவில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இந்திய நிறுவனமான அதானிக்கு 49 வீத பங்கினை வழங்க முன் வந்துள்ள நடைமுறை அரசு, தாம் குத்தகைக்கு விடவோ விற்பனை செய்யவோ இல்லையெனவும் விளக்கமளித்து வருகிறது.
எனினும், கடந்த அரசில் முன் வைக்கப்பட்ட திட்டமே அதுவென எதிர்க்கட்சியினர் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், பல வெளிநாடுகள் ஆர்வம் காட்டியும் தான் அனுமதிக்கவில்லையென மைத்ரி இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment