இராவணன் கட்டியெழுப்பிய நாட்டை அவனது தம்பியை வைத்தே நாசமாக்கியது போன்று இந்தியா ஒரு போதும் இலங்கை வளர்ச்சியடைவதை விரும்பாது என தெரிவிக்கிறார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்.
இராம - இராவண காலத்தில் எவ்வாறு நாட்டைக் காட்டிக் கொடுக்க ஆளிருந்ததோ அவ்வாறே இன்றும் பல பேர் இருப்பதாக தெரிவிக்கும் அவர், ஈற்றில் இராவணனின் தம்பிக்கு ஆள்வதற்கு நாடில்லாமல் போன கதை தான் நடக்கும் என்றும் தெரிவிக்கிறார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1 comment:
ஆசை தான் துன்பத்திற்கு காரணம்
Post a Comment