உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் தேசிய ரீதியிலான 'லொக்டவுன்' இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே ஸ்கொட்லாந்தில் அனைவரையும் தமது வீடுகளில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
தற்சயம் ஒரு லட்சம் பேரில் 519 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை கடந்த சில நாட்களாக பல்லாயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையிலேயே புதிய லொக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment