தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் அரசு படுதோல்வியடையும் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரு அறிக்கைகளை வழங்கியுள்ளதாகவும் அவற்றின் பின்னணியிலேயே தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் லக்ஷ்மன் கிரியல்ல.
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவித்த போதிலும் அதற்கான தேதி நிர்ணயத்தை கால வரையறையின்றி அரசு தள்ளி வைத்துள்ளது.
இதற்கான காரணம், குற்றப் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் ஆராய்ந்து வழங்கிய அறிக்கைகளே என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment