முகத்துவார மீன்பிடித்துறைமுக ஊழல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ராஜித் சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முகத்துவார மீன்பிடித்துறைமுகத்தை குத்தகைக்கு விட்டதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment