முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் மாத்திரம் தான் செய்ய வேண்டும் என்பதற்கு அல்-குர்ஆனில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லையென அண்மையில் உதய கம்மன்பில தெரிவித்திருந்த கருத்தினை இன்று தனது நாடாளுமன்ற உரையின் போது மறுத்து பதிலளித்துள்ளார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
அல்-குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் எரியூட்டல் பற்றி தெரிவிக்கப்படாததன் அடிப்படைக் காரணமே அடக்கம் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரம் எனவும் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் மாத்திரமே செய்துள்ளதன் வழிமுறையையுமே முஸ்லிம்கள் பின்பற்றுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.
பல கோடி மக்கள் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் வேத நூலில் குறைபிடிக்க உதய கம்மன்பில மேற்கொண்டுள்ள இம்முயற்சி வீணான பரப்புரையொன்றே தவிர ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளும் பௌத்த தர்மத்தினை கம்மன்பில கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த ரஹ்மான், புத்தரின் காலத்திலும் ஏனைய கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் இருந்த போதிலும் புத்தர் அவற்றை எதிர்ப்பதன் ஊடாக தனது போதனைகளை நியாயப்படுத்த முனையவில்லையெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment