முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை விதிக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 January 2021

முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை விதிக்க முஸ்தீபு

 


யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் விவகாரங்களின் பின்னணியில் முன்னாள் இராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக தடைகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.


சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த அரசு வழங்கியிருந்த உறுதிமொழியிலிருந்து தனிச்சிங்கள அரசு எனும் கோசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நடைடுறை அரசு வாபஸ் பெற்றிருந்தது.


இந்நிலையில், இவ்வருட மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முக்கிய அம்சமாக கருதப்படுகின்ற அதேவேளை கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரமும் இதில் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment