ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்த்து அவர் விடுதலையாகும் வரை தான் நாடாளுமன்றில் கருப்புச் சால்வையணிந்து வரப்போவதாகவும் தெரிவித்து இன்று அணிந்து கொண்டார் ஹரின் பெர்னான்டோ.
எனினும், இச்செயலானது நீதித்துறையை அசிங்கப்படுத்தும் செயல் எனவும் ரஞ்சன் நீதித்துறையை அவமதித்ததாலேயே சிறை சென்றுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே அதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க 'பரிசுத்தமான' ஒரு நபர் இல்லையெனவும் அவருக்கு எதிராக பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மஹிந்தானந்த இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment