பொத்துவில் பகுதியில் முஸ்லிம்கள் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி அப்பகுதி பௌத்த பிக்குகள் உருவாக்கி வரும் சர்ச்சைகளின் தொடர்ச்சியில் இன்று அங்கு ஞானசார அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
லஹுகல - தாரம்பனாவ பகுதிகளில் புராதன நிலங்களை அபகரித்து வயல் வெளிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சட்டவிரோதமாக அவை தொடர்வதாகவும் இதன் போது அங்குள்ள பிக்குகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகளை அழித்தே இவ்வயற் பரப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அது தமது பரம்பரைச் சொத்து என விவாதிப்பதாகவும் பல்வேறு விடயங்கள் இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment