நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் எரிபொருள் மற்றும் எண்ணை விலைகளை அடிப்படையாகக் கொண்டு பாண் உட்பட அனைத்து வகை பேக்கரி தயாரிப்புகளின் விலைகளும் பெப்ரவரி ஆரம்பத்தோடு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இவ்விலையுயர்வு தவிர்க்க முடியாதது எனவும் சங்கம் இணங்கினாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் பேக்கரி உரிமையாளர்கள் விலையுயர்வின் மூலம் மாத்திரமே தமது சூழ்நிலையை சமாளிக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, ஒரு லீற்றர் எண்ணையில் 250 ரூபா அரசின் வரியாக இருப்பதாகவும் அதனைக் குறைப்பதன் ஊடாக விலையுயர்வைத் தவிர்க்க முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment