சிறை சென்றுள்ள சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தாம் கைவிடப் போவதில்லையெனவும் தொடர்ந்தும் போராடப் போவதாகவும் தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிட்டுள்ளது. இதேவேளை, அவரது சிவில் உரிமைகளும் பறிக்கப்படுமாயின் குறைந்தது 11 வருடங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க அரசியலுக்கு மீள முடியாத சூழ்நிலை உருவாகும்.
எனினும், ரஞ்சனைக் கைவிடப் போவதில்லையெனவும் அவரது விடுதலைக்காகப் போராடவுள்ளதாகவும் சஜித் தெரிவிக்கிறார். நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment