உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் உதயங்க வீரதுங்க, அரச அதிகாரிகளை மீறி தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்ற நிலையில் அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனித்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை அலுவலகத்துக்கே தெரியாமல் யால பகுதிக்கு உக்ரைன் நாட்டவர்களை உதயங்க வீரதுங்க அழைத்துச் சென்றிருந்த நிலையில் அங்கு பணியாற்றிய சாரதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் பொலன்நறுவ மற்றும் சீகிரியவுக்கான சுற்றுப் பயணங்களை உதயங்க ஏற்பாடு செய்திருந்த போதிலும், இது குறித்து பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அவை இரத்துச் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், அமைச்சர் பிரசன்ன உட்பட அதிகாரிகள் அனைவரும் மௌனித்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றமையம் உதயங்க, ராஜபக்ச குடும்ப உறுப்பினர் என்பதால் இந்த நிலை எனவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment