கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தனிமைப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 8ம் திகதி தொற்றிருப்பது கண்டறியப்பட்டதன் பின்னணியில் தயாசிறி தனிமைப்பட்டிருந்தார். இதுவரை நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தொற்றிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment