நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனும் கேரரிக்கை வலுத்துள்ளதையடுத்து கால அவகாசம் கோரியுள்ளார் சபாநாயகர்.
பிறேமலால் ஜயசேகரவை சபாநாயகர் அனுமதித்திருந்தமை தொடர்பில் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அவரது வழக்கு விபரங்களை முழுமையாக ஆராய்ந்தே அனுமதியளிக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார் சபாநாயகர்.
இந்நிலையில், ரஞ்சனின் விவாகரத்தை ஆராய்ந்து பதில் தருவதற்கு இரண்டு மூன்று வாரங்களாவது தமக்கு வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment