ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கினைத் தொடர்வதைக் கைவிடுவதாக சட்டமா அதிபர் அலுவலகம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில் வழக்கிலிருந்து பிள்ளையான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலையின் பின்னணியில் 2015ம் ஆண்டு பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை, சிறையிலிருந்தவாறே பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றிருந்தார். இந்நிலையில், கடந்த நவம்பரில் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததோடு தற்போது வழக்கிலிருந்து அவரும் அவரது சகாக்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment