நீதியமைச்சர் அலி சப்ரியை விமர்சித்து சிங்கள வானொலியொன்றின் இலட்சினையுடன் போலிச் செய்தி பரப்பிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் போலியாக உருவாக்கப்பட்ட செய்தியைக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவ்வாறு போலிச் செய்தி பரப்பிய நபரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment