சதொச ஊழியர்களை தனது தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2010 - 2014 வரையான காலப்பகுதியில் 153 பேரை சதொச நிறுவனத்தில் வேலைக்கமர்த்தி அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியதன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இவ்வழக்கைத் தொடுத்திருந்தது.
எனினும், வழக்கு விசாரணையைத் தொடர்வதற்கான முறையான வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதில்லையென மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இப்பின்னணியில் ஜோன்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment