வேறு காரணத்தால் இறந்ததாக அடையாளப்படுத்தி வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரின் உடலத்தை இறுதி நேரத்தில் மீண்டும் சென்று கையகப்படுத்தி எரித்த சம்பவம் குளியாபிட்டியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபர் ஒருவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் உடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்துள்ளனர்.
எனினும், மருத்துவ அறிக்கை பிரகாரம் குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பதாக முடிவு செய்த வைத்தியசாலை நிர்வாகம் விரைந்து உடலைக் கைப்பற்றி எரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது(சோனகர்.கொம்).
No comments:
Post a Comment