கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்திய நிறுவனம் பொறுப்பெடுத்தால் அதற்கெதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பெங்கமுவெ நாலக்க தேரர்.
நல்லாட்சியில் அறிவிக்கப்பட்டதற்கமைவாக இந்திய அதானி நிறுவனத்திடம் குறித்த பகுதி ஒப்படைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நல்லாட்சி அரசு முழுமையாக வழங்க இருந்தாகவும் தமது அரசு 49 வீத பங்குகளையே வழங்குவதாகவும் அரசு அண்மையில் விளக்கமளித்திருந்தது.
ஆயினும், கடந்த அரசும் அதே நிபந்தனையிலேயே இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கவிருந்தமைக்கான ஆவணங்களை எதிர்க்கட்சியினர் வெளியிட்டிருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் இதை முன் மொழிந்துள்ள நிலையில் பௌத்த துறவிகள் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment